அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் தோற்றாலும் அடுத்த முறை கண்டிப்பாக வெல்வார் என கமலா ஹாரிஸின் பூர்வீக கிராமமான துளசேந்திரபுரத்தை சேர்ந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் அரசியல் ஆளுமைகளில் கமலா ஹாரிஸும் ஒருவர். ஜோ பைடன் ஜனாதிபதியாக பதவியேற்றபோது, துணை ஜனாதிபதியாக பதவியேற்ற கமலா ஹாரிஸ், இந்த அதிபர் தேர்தலில், ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
கமலா ஹாரிஸின் தாயார் வழி உறவானது தமிழ்நாட்டுடன் தொடர்புடையது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராமத்தை சேர்ந்த கோபாலன் என்பவரது மகள் வயிற்று பேத்திதான் கமலா ஹாரிஸ். அதனால் கடந்த 2020ம் ஆண்டிலேயே துணை அதிபராக பொறுப்பேற்ற கமலா ஹாரிஸ்காக துளசேந்திரபுரம் மக்கள் சிறப்பு பூஜைகள் செய்து, அன்னதானம் உள்ளிட்டவற்றை செய்தனர்.
இந்நிலையில் இந்த முறை அவர் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என துளசேந்திரபுரம் கோவில் பலரும் வேண்டிக் கொண்டதோடு சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டன. தற்போது அவர் தோல்வி அடைந்துள்ள நிலையில், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் அவர் கண்டிப்பாக வெற்றி பெறுவார் என தாங்கள் நம்புவதாக அந்த கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
Edit by Prasanth.K