வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 5 நவம்பர் 2024 (17:54 IST)

அடுத்த அமெரிக்க அதிபர் யார்? வாக்குப்பதிவு தொடக்கம்.. நாளை காலை முன்னிலை விவரங்கள்..!

Kamala Trump
அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் சற்றுமுன் வாக்குப்பதிவு தொடங்கி விட்டதாகவும், நாளை காலைக்குள் வாக்குப்பதிவை முடித்துவிட்டு உடனடியாக வாக்குகள் எண்ணப்படும் என்றும் நாளை காலை முன்னிலை நிலவரங்கள் தெரிய வரும் என்றும் கூறப்படுகிறது. 
 
உலகமே எதிர்பார்க்கும் அமெரிக்கா அதிபர் தேர்தலின் வாக்குப்பதிவு இந்திய நேரப்படி இன்று மாலை 4:30 மணிக்கு தொடங்கியது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து முன்னாள் அதிபர் மற்றும் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப் போட்டிருக்கிறார். 
 
தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் இரு தரப்பிற்கும் இடையே குறைந்த வித்தியாசமே இருந்ததால், தேர்தலில் யார் வேண்டுமானாலும் வெற்றி அடையலாம் என்று கூறப்படுகிறது.

வெள்ளை இன மக்களின் ஓட்டு டிரம்புக்கும், நகரத்தில் உள்ள பட்டதாரிகள் ஓட்டு கமலா ஹாரிஸ் அவர்களுக்கும் கிடைக்கும் என்று கூறப்பட்டு வருகிறது. 
 
தேர்தல் முடிந்த சில மணி நேரத்தில் முடிவுகள் வெளியாக தொடங்கும் என்றாலும், அடுத்த அதிபர் யார் என்பதை ஒருநாள் தெரிந்து கொள்ள ஒரு நாள் வரை காத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஈரான் மற்றும் இஸ்ரேல் போர் உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் ஆகிய இரண்டையும் நிறுத்தும் வலிமை கொண்ட அடுத்த அமெரிக்க அதிபர் யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
 
Edited by Mahendran