1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. legend saravanan request cm joseph vijay

விஜய் நினைச்சா ஒரு நிமிஷம்தான்!.. முதல்வருக்கு லெஜண்ட் வைத்த கோரிக்கை...

legend saravana
தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் செயல்பட்டு வரும் சரவணா ஸ்டோர் நிறுவனத்தின் அதிபர் லெஜென் சரவணன். லெஜன்ட் என்கிற திரைப்படம் மூலம் சினிமாவிலும் நடிக்க தொடங்கினார். இந்த படம் எதிர்பார்த்து வெற்றியை பெறவில்லை என்றாலும் அதற்கு பின் அவர் நடித்த லீடர் திரைப்படம் அவருக்கு ஒரு வெற்றி படமாக அமைந்தது.

இந்நிலையில் ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னை பாடியில் உள்ள சரவணா ஸ்டோரில் லெஜெண்ட் சரவணன் சார்பில் 3000 ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும் ஆட்டோ ஓட்டுனர்களை லெஜண்ட் சரவணன் தனது சொகுசு காரில் அழைத்து சென்றார்

அது தொடர்பான நிகழ்ச்சியில் பேசிய சரவணன் ‘கடந்த 13 வருடங்களாக ஆட்டோ ஓட்டுநர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. முதல்வர் விஜய் நினைத்தால் ஒரே நொடியில் அவற்றை நிறைவேற்ற முடியும்’ என்று கோரிக்கை வைத்தார். மேலும் பருவ மழை காலத்தில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி உயிரிழப்புகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் அவர் அறிவுரை செய்தார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
தாராபுரத்திற்கு புதிய திட்டங்களை அறிவித்த முதல்வர் விஜய்!...