1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. airtel introduced new prepadi rechage plans

இனி டேட்டா இல்லாமல் ரீசார்ஜ் செய்யலாம்!. புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்த ஏர்டெல்!...

airtel
பொதுவாக JIO, AIRTEL போன்ற செல்போன் நெட்வொர்ட்க்கில் DATA இல்லாமல் பேசுவதற்காக மட்டுமே 28 அல்லது 30 நாட்கள் கொண்ட திட்டம் எதுவும் நடைமுறையில் இல்லை. 28 நாட்கள் ரீசார்ஜ் செய்தால் டேட்டாவோடுதான் ரிசார்ஜ் செய்ய முடியும்.

இந்நிலையில், TRAI-யின் புதிய வழிகாட்டுதல்களை ஏற்று ஏர்டெல் நிறுவனம் இணைய டேட்டா இல்லாத மூன்று புதிய Prepaid திட்டங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

அதன்படி ரூ.185 திட்டத்தில் 28 நாட்களுக்கும், ரூ.203 திட்டத்தில் 30 நாட்களுக்கும், ரூ.206 திட்டத்தில் ஒரு காலண்டர் மாதத்திற்கும் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் 300 SMS வழங்கப்படும். இந்த மூன்று திட்டங்களிலும் இலவச ஹலோ ட்யூன்ஸ் வசதியும் இடம் பெற்றுள்ளது.

இணையத்தை அதிகம் பயன்படுத்தாதவர்கள், முதியவர்கள் மற்றும் இரண்டாம் சிம் பயன்படுத்துவோருக்கு இந்த திட்டங்கள் பயனுள்ள்தாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
கடன் வாங்குவதை குறைத்த தவெக அரசு!.. அரசியல் விமர்சகர்கள் பாராட்டு..