1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. joseph vijay announced some plans for madhuranthagam

மதுராந்தகத்திற்கு புதிய திட்டங்களை அறிவித்த முதல்வர் விஜய்!...

vijay
2026 சட்டமன்றத் தேர்தலில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றது. ஆனால் அந்த இரண்டு எம்.எல்.ஏக்களும் தங்களின் பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்தனர். எனவே அந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் சில நாட்களுக்கு முன்பு நடந்தது. ஏற்கனவே அதிமுக சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்ற அதே வேட்பாளர்கள் இரண்டு பேரும் இடைத்தேர்தலில் தவெக சார்பாக விசில் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றனர்..

இந்நிலையில், மதுராந்தகம் தொகுதிக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் புதிய திட்டங்களை அறிவித்திருக்கிறார்.

மதுராந்தகம் தொகுதியில் ரூ.1.80 கோடி செலவில் ஆறு நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும்.

ரூ.20 கோடி மதிப்பில் 20 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நெல் சேமிப்பு கிடங்கு அமைக்கப்படும்..

ரூ 10 கோடி மதிப்பில் 25 ஏக்கரில் மாநில விதை பண்ணை அமைக்கப்படும்

மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் சுமார் ரூ 10 கோடி செலவில் விபத்து மற்றும் அவசர கால சிகிச்சை பிரிவு அமைக்கப்படும்.

பாலாற்றின் குறுக்கே பட்டாளம், உதயம்பாக்கம் இடையே புதிய உயர்மட்ட தடுப்பணை கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்..

மதுராந்தகம் துணை மின் நிலையத்தில் கூடுதலாக சுமார் ரூ 3 கோடியில் 25 MVA திறன் கொண்ட மின்மாற்றி நிறுவப்படும்

என முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்திருக்கிறார்..
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
சென்னையில் அடுத்தகட்ட மழை வாய்ப்பு எப்போது? தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு!