Daily Horoscope
✕

அண்ணாமலையை தொடர்ந்து தனி இயக்கம் துவங்கிய லதா ரஜினிகாந்த்.. அரசியலுக்கு எண்ட்ரியா?..

Updated: வெள்ளி, 5 ஜூன் 2026 (18:21 IST)
பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை ஒரு புதிய இயக்கத்தை தொடங்கியிருக்கிறார். அந்த இயக்கம் விரைவாக அரசியல் கட்சியாக மாறும் எனவும் அவர் கூறியிருக்கிறார். இந்த நிலையில்தான் ரஜினியின் மனைவி லதா ஒரு புதிய மக்கள் இயக்கத்தை தொடங்கியுள்ளார்.

இந்த இயக்கத்திற்கு மக்கள் மேடை என பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. மாற்றத்தை விரும்பும் எல்லோரும் எங்களோடு சேர்ந்து பயணிக்கலாம் என ரஜினி லதா ரஜினிகாந்த் கூறியிருக்கிறார். மேலும் எல்லாரும் ஒன்றும் சேர்ந்து மாபெரும் சக்தியாக மாறி பல நல்ல காரியங்களை செய்வோம் எனவும் அவர் அழைப்பு விடுத்திருக்கிறார்., இந்த இயக்கத்தில் இணையவதற்கு 75500 80515 என்கிற தனி மொபைல் என்னும் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், makkalmedaitn12@gmail.com என்கிற மின் அஞ்சல் முகவரியும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் மக்கள் மேடை என்கிற இயக்கத்தில் எல்லோரும் சேரலாம். நிறைய ஆக்கப்பூர்வமான காரியங்களை செய்யலாம். மூத்த குடிமக்கள். ஐஏஎஸ். ஐபிஎஸ் அதிகாரிகள். ஆசிரியர்கள் என யாராக இருந்தாலும் உங்களின் அறிவையும். அனுபவைத்தையும்  எங்களோடு பகிருங்கள். தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு தொகுதியிலும் நீங்கள் பணி செய்யலாம்.. நாங்கள் நிறைய தலைவர்களை உருவாக்க விரும்புகிறோம்’ என அதில் கூறியிருக்கிறார்.

ரஜினி அரசியலுக்கு வராத நிலையில் அவரின் மனைவி லதா ரஜினிகாந்த் மக்கள் மேடை என்கிற தலைப்பில் ஒரு இயக்கத்தை துவங்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
About Author
பாலகிருஷ்ணன்

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments