வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 18 நவம்பர் 2020 (12:42 IST)

ஒரு கிலோ ஒரு ரூபாய்: ஆற்றில் கொட்டப்பட்ட வெண்டைக்காய்!

ஒரு கிலோ ஒரு ரூபாய்: ஆற்றில் கொட்டப்பட்ட வெண்டைக்காய்!
ஒரு பக்கம் வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கு விலை அதிகரித்து கொண்டே இருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் வெண்டைக்காய் விலை கடும் வீழ்ச்சி அடைந்ததால் ஆற்றில் கொட்டும் அவலநிலை ஏற்பட்டுள்ளது 
 
தேனி மாவட்டத்தில் வெண்டைக்காய் விளைச்சல் அதிகரித்த நிலையில் போதிய விலை போகாததால் வண்டி வண்டியாக ஆற்றில் வெண்டைக்காய் கொட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
தேனி, ஆண்டிபட்டி, சின்னமனூர் உள்ளிட்ட பகுதிகளில் வெண்டைக்காய் சாகுபடி செய்யப்பட்ட நிலையில் வெண்டைக்காய் மிக அதிகமாக இருந்தது. இதனால் வெண்டைக்காயை வாங்க வியாபாரிகள் ஆர்வம் காட்டாததால் வீரபாண்டி ஆற்றில் விவசாயிகள் வண்டி வண்டியாக வெண்டைக்காய்க்ளை கொட்டினர் 
 
ஒரு ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்ததாகவும் தற்போது கிலோ ஒரு ரூபாய்க்கு மட்டுமே விலை போவதாகவும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்/ வெண்டைக்காய் விலை போகாததால் ஆற்றில் விவசாயிகள் கண்ணீருடன் கொட்டிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது