இரண்டாவது நாளாக சரிவை சந்திக்கும் தங்கம் விலை; இன்றைய நிலவரம்!

Prasanth Karthick| Last Modified புதன், 18 நவம்பர் 2020 (11:28 IST)
கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் விற்பனையான தங்கம் விலை தற்போது குறைந்துள்ளது.   

கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தங்கம் விலை ரூ.40 ஆயிரத்தை தாண்டியது. கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் விற்பனையான தங்கம் விலை தற்போது தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.   
 
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.38,272 ஆக விற்பனை ஆகி வருகிறது. அதேபோல ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.20 குறைந்து ரூ.4,784 ஆக விற்பனை ஆகி வருகிறது. மேலும் கடந்த சில மாதங்களில் இந்தியாவில் வெளிநாடுகளில் இருந்து தங்கம் வாங்கப்படுவதும் குறைந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :