புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 20 பிப்ரவரி 2022 (09:26 IST)

அவர் ஓட்ட வேற யாரோ போட்டுட்டாங்களாம்..! – குழப்பமான எல்.முருகனின் ஓட்டு!

மத்திய இணை அமைச்சர் எல்.முருகனின் பெயரில் வேறு ஒருவர் ஓட்டு போட்டதாக ஏற்பட்ட குழப்பம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் பொதுமக்கள் முதல் அரசியல், சினிமா பிரமுகர்கள் வரை பலரும் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.

சென்னை அண்ணாநகர் கிழக்கு பகுதியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வாக்கு செலுத்த சென்றபோது அவர் ஏற்கனவே வாக்களித்து விட்டதாக கூறப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆராய்ந்ததில் அதே வாக்குசாவடியை சேர்ந்த பி.முருகன் என்பவர் வாக்களித்தபோது தவறுதலாக எல்.முருகனின் பெயரை தேர்தல் அலுவலர் குறித்துக் கொண்டதாக தெரிய வந்துள்ளது. இந்த பிரச்சினைகள் சரிசெய்யப்பட்டு மீண்டும் எல்.முருகன் மாலை தனது வாக்கினை அளித்துள்ளார்.