செவ்வாய், 18 ஜூன் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 20 பிப்ரவரி 2022 (08:02 IST)

உத்தரபிரதேசத்தில் 3ஆம் கட்ட வாக்குப்பதிவு:விறுவிறுப்பாக வாக்களிக்கும் மக்கள்!

உத்தரபிரதேச மாநிலத்தில் ஏற்கனவே இரண்டு கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் இன்று மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு சற்றுமுன் தொடங்கியுள்ளது.
 
இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்
 
இன்று நடைபெறும் மூன்றாம் கட்ட தேர்தலில் 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது என்பதும் இந்த தேர்தலில் 2.15 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
59 தொகுதிகளில் 627 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இங்கு போட்டியிடும் வேட்பாளர்களில் 245 பேருக்கு ஒரு கோடிக்கும் மேல் சொத்துக்கள் இருப்பதாக வேட்பு மனுக்களில் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது