1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 26 ஜூன் 2023 (10:35 IST)

அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலை: காவேரி மருத்துவமனை முக்கிய தகவல்..!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு காவேரி மருத்துவமனையில் சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் தற்போது அவரது உடல்நிலை குறித்த தகவலை மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
 
அமைச்சர் செந்தில் பாலாஜி அறுவை சிகிச்சைக்கு பின்னர் தனி அறையில் 20 நாட்கள் தங்கி இருந்து ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் செந்தில் பாலாஜி தற்போது நல்ல நிலையில் தேறி வருகிறார் என்றும் காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது. 
 
மேலும் செந்தில் பாலாஜியால் தற்போது மெல்ல பேச முடிகிறது என்றும் இன்னும் எழுந்து இயல்பாக நடக்கவில்லை என்றும் மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது 
 
அதுமட்டுமின்றி நீதிமன்ற காவலில் இருப்பதால் அவரது தம்பி அசோக் உள்பட குடும்ப உறுப்பினர்கள் யாரும் பார்க்க வரவில்லை என்றும் காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது. செந்தில் பாலாஜி இன்னும் எழுந்து நடமாட முடியவில்லை என்றும் இன்னும் சில நாட்கள் அவர் முழு ஓய்வுடன் சிகிச்சை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran