1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 24 ஜூன் 2023 (10:18 IST)

இரண்டாவது நாளாக தொடரும் வருமான வரி சோதனை: செந்தில் பாலாஜி தரப்பு அதிர்ச்சி..!

கரூரில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் செந்தில் பாலாஜி சகோதரர் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய வீடுகளில் வருமானவரித்துறை சோதனை செய்து வந்த நிலையில் நேற்று மீண்டும் கரூரில் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை செய்து வருவதாக வெளியான தகவலை பார்த்தோம் 
 
இந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாகவும் கரூரில் சோதனை தொடர்ந்து வருவதால் செந்தில் பாலாஜி தரப்பினர் அதிர்ச்சி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. 
 
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஜவஹர் பஜார் பகுதியில் வருமானவரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவும் அதேபோல் பழனி முருகன் நகைக்கடையில் இரண்டாவது நாளாக வருமானவரி சோதனை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
கரூரில் கடந்த முறை வருமான வரித்துறையினர் சோதனை செய்ய வந்தபோது திமுகவினர் தாக்கியதாக கூறப்பட்ட நிலையில் தற்போது துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்புடன் அதிகாரிகள் சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran