வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 24 ஜூன் 2023 (21:13 IST)

குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்துடன் ராம்சரண் - உபாசனா தம்பதியர் டுவீட்

ramcharan - upasana
தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகரான ராம்சரண் தேஜா மனைவி உபாசனாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதற்கு, சூப்பர் ஸ்டார் மற்றும் அல்லு அர்ஜூன் வாழ்த்துகள் கூறியுள்ளனர்.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ராம்சரண். இவர் மஹதீரா, ஆர்.ஆர்.ஆர்  உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் ராம்சரண் தேஜாவுக்கும் அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் ரெட்டியின் பேத்தி உபாசனாவிற்கும் கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் திருமணம் ஆகி 11 வருடங்கள் கழித்து ராம் சரண்யா உபாசனா தம்பதிக்கு சமீபத்தில்  பெண் குழந்தை பிறந்துள்ளது. 

இந்த நிலையில்,  தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி ஆகிய சினிமா  நட்சத்திரங்கள், கலைஞர், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் இத்தம்பதிக்கு வாழ்த்துகள் கூறினர்.

இந்த நிலையில், இன்று  ராம்சரண்,- உபாசனா தம்பதியர், ''தங்கள் குழந்தைக்கு கிடைத்த வரவேற்பால் மகிழ்ச்சியடைந்தோம். அனைத்து அன்பிற்கும், வாழ்த்துகளுக்கும்  நன்றி'' என்று ஒரு டுவீட் பதிவிட்டு, தங்கள் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர்.