வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 27 டிசம்பர் 2023 (20:29 IST)

கரூர் ஸ்ரீநந்தீஸ்வரர் ஞானபீடம்- குருதரிசனம் - 2023 குருபூஜை விருது விழா!

karur
கருவூர், காளிபாளையம் , பஞ்சமாதேவியில் அமைந்துள்ள ஸ்ரீ நந்தீஸ்வரர் ஞான பீடத்தில் குரு தரிசனம் 2023, சத்குரு சுவாம் ஸ்ரீ தபாலேஸ்வரர் குரு பூஜை நிகழ்வு. 27.12.2023 புதன்கிழமை அதிகாலை துவங்கி வழிபாடுகள், பக்தி நிகழ்ச்சி, வாய்ப்பாட்டு மஹா மிருத்யுஞ்ச ஜெப வேள்வி 108 பேர் சாரதா கல்லூரி மாணவிகள் பங்கு பெற நடைபெற்றது.
 
அதை அடுத்து ஆன்மீகம் , கல்வி , அறம் என சாதனை படைத்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
 
முனைவர் கோவிந்தராசு இருவருளும் திருவருளும் எனும் தலைப்பில் உரையாற்றினார்.
சின்மியா ராமதூத தியான மண்டபம் அனுத்தமானந்தாஜி முன்னிலை வகித்தார் ஸ்ரீநந்தீஸ்வரர்ஞான பீடம் சுவாமி சித்த குருஜி "நந்தி விருதினை "தமிழ்ச் செம்மல் மேலை பழநியப்பனுக்கு வழங்கினார்.
 
தொடர்ந்து நந்தீஸ்வர ஞானபீட விருதுகளை சிவனடியார் திருக்கூட்டம் வி.பி.என்.பாலசுப்பிரமணியம், பொள்ளாச்சி பொறியாளர் என்.சக்திகுமரன், ஸ்ரீமகா அபிஷேகக்குழு ஆனிலை கே. பாலகிருஷ்ணன், பரணி பார்க்கல்விக் குழுமம் முனைவர் இராமசுப்பிரமணியன், ஞானாலயா வள்ளலார் கோட்டம் வே.ஜெகதீசன். J. டெக்ஸ் கே.கே . தங்கராசு ஆகியோருக்கு வழங்கினார்.
 
நிகழ்ச்சிகளை G.சிவராமன் , வீரா ராஜேந்திரன், திலகவதி, ஸ்காட் தங்கவேல் , பி.கனேஷ்நெறிப்படுத்தினர்.
 
விருது பெற்றவர்கள் சார்பில் ஏற்புரை ஆற்றிய மேலை பழநியப்பன் விருதுகள் பாராட்டுகள் எங்கள் பணி தொடர துணை நிற்கும். விருதிற்கு உரிய தகுதிகளை வளர்த்துக்கொள்ள வழிவகுக்கும் , இங்கு விருது பெறும் அனைவரும் பல ஆண்டுகளாக அவமானங்களை வெகுமானமாக எண்ணி செயல்படுபவர்கள் தொடர்ந்து செயல்படுவோம் என்றார்.
 
சித்த குருஜி வாழ்த்துரையில் வாழ்வில் இறையருள் கூட்ட குருவருளும் குரு மூலம் இறையருளும் பெற வேண்டும் என்றார்.
 
யதீஸ்வரி நீலகண்ட பிரியா அம்பா ,சி.கார்த்தி காலட்சுமி , பியூபா புஷ்பராசன் , சுமதி சிவசுப்பிரமணியன் எம்.எஸ்.கருணாநிதி ஆர். சண்முகநாதன் சாய்ராம் கணேசன் சின்னப்பன் , ரமணன் திருமூர்த்தி , காவேரி பாலசுப்பிரமணியன் உட்பட பலர் பங்கு பெற்றனர்.
 
அறங்காவலர்கள் செல்ல பதி ரவிச்சந்திரன், டி.கிருஷ்ணகுமார், நந்தினி கிருஷ்ணகுமார் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்
 
சென்னை , நாமக்கல், கோவை , திருப்பூர், பொள்ளாச்சி, உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பங்கேற்றனர்
குரு பூஜை அன்னம்பாலிப்பும் சிறப்பாக நடைபெற்றது