தொடர்புடைய செய்திகள்
- பிரபலமான கடைகளின் முதலாளிகளுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்-- ராஜேஸ்வரி பிரியா
- ஆடி காரில் வந்து மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் கைது..!
- செமஸ்டர் தேர்வு எழுத வேறு கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள்: அண்ணா பல்கலை உத்தரவு..!
- தலைமையாசிரியர்களுடன் கலந்துரையாடல்- அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
- பைக் சாகசத்தில் ஈடுபட்ட நபர் கைது...வாகனம் பறிமுதல்!
பொறியியல் மாணவர் கழுத்தை அறுத்த எம்.பி.ஏ. மாணவர்.. கரூர் கல்லூரியில் அதிர்ச்சி சம்பவம்..!
கரூர் அருகே உள்ள பொறியியல் கல்லூரி மாணவர் கழுத்தை எம்பிஏ மாணவர் அறுத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் குளித்தலையில் தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வரும் மாணவர் நிதிஷ்குமார் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பொறியியல் கல்லூரியின் மாணவர் நிதிஷ்குமாரின் கழுத்தை எம்பிஏ மாணவர் அண்ணாமலை அறுத்ததாக தெரிகிறது.
இதனால் படுகாயம் அடைந்த பொறியியல் கல்லூரி மாணவர் நிதிஷ்குமார் குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனை அடுத்து கழுத்தை அறுத்த எம்பிஏ மாணவர் அண்ணாமலையை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
