புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 22 ஆகஸ்ட் 2020 (10:31 IST)

”இந்தி தெரியலைனா வெளிய போங்க!” – கொதித்தெழுந்த கனிமொழி

ஆயுஷ் அமைச்சகத்தின் பயிற்சி வகுப்பில் இந்தி தெரியாதவர்கள் வெளியேறலாம் என கூறப்பட்டதற்கு கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் காணொளி வகுப்பில் பல்வேறு இந்திய மாநிலங்களை சேர்ந்த சித்த, ஆயுர்வேத மருத்துவர்களும் கலந்து கொண்டுள்ளனர். அதில் பேசியவர்கள் இந்தியில் பேசியதால், இந்தி தங்களுக்கு தெரியாது என்றும் எல்லாருக்கும் புரியும்படி ஆங்கிலத்தில் பேசுமாறும் சிலர் கேட்டதாக கூறப்படுகிறது.

அதற்கு இந்தி தெரியாதவர்கள் தாராளமாக வெளியேறலாம் என அவர்கள் பதிலளித்ததாக தெரிகிறது. இதுகுறித்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி உள்ள நிலையில் ஆயுஷ் அமைச்சகத்தின் செயல்பாட்டிற்கு கனிமொழி எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் “இந்தி தெரியாது என்றால் அவமதிக்கப்படுவதை இன்னும் எத்தனை நாள் பொறுத்துக்கொள்ள போகிறோம்..?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக விமான நிலையத்தில் அதிகாரி ஒருவர் இந்தி தெரியாது என்பதால் இந்தியரா என கேட்டதாக கனிமொழி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.