செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 21 ஆகஸ்ட் 2020 (15:45 IST)

கட்டணம் செலுத்தாவிட்டாலும் ரிசல்ட் வர வேண்டும்! – அண்ணா பல்கலைகழகத்திற்கு உத்தரவு!

செமஸ்டர் கட்டணங்களை கட்டாத மாணவர்களின் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைகழகம் வெளியிடாமல் இருந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது.

கொரோனா காரணமாக தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளிலும் இறுதியாண்டு மாணவர்களை தவிர மற்ற செமஸ்டர் மாணவர்களுக்கு தேர்ச்சி அளிக்க அரசு உத்தரவிட்டது. அதை தொடர்ந்து அண்ணா பல்கலைகழகம் இறுதியாண்டு மாணவர்கள் தவிர்த்து பிற செமஸ்டர்களுக்கான ரிசல்ட்டை வெளியிட்டது. ஆனால் அதில் பலரது பெயர்கள் விடுபட்டிருந்தது. கல்வி கட்டணம் செலுத்தினால் மட்டுமே ரிசல்ட் வெளியிடப்படும் என அண்ணா பல்கலைகழகம் கூறியதால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம் மாணவர்கள் கல்வி கட்டணம் செலுத்தினாலும், செலுத்தாவிட்டாலும் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைகழகம் வெளியிட வேண்டும். அண்ணா பல்கலைகழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளிலும் கட்டணம் செலுத்தாவிட்டாலும் அனைவரது தேர்வு முடிவுகளையும் வெளியிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.