செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 29 ஆகஸ்ட் 2021 (13:00 IST)

மாற்றுதிறனாளிகளுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும்! – கமல்ஹாசன் கோரிக்கை!

தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு போதிய இடஒதுக்கீடு வழங்க கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் செப்டம்பர் 1 முதல் மாற்றுதிறனாளிகள் துறை மானிய விவாதம் நடைபெற உள்ளது. இதுகுறித்து அறிக்கை விடுத்துள்ள மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் “கடந்த ஆட்சியில் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றத்திற்கு எந்த திட்டமும் செயல்படுத்தப்படாதது துரதிர்ஷமானது. இந்த ஆட்சியில் மாற்றுத்திறனாளிகளின் பல நாள் கோரிக்கையான அரசு வேலைவாய்ப்பில் 5 சதவீத இடஒதுக்கீடும், மாதாந்திர உதவித்தொகையை அதிகரித்து வழங்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான கற்பித்தல் பள்ளியை மாவட்டம்தோறும் அமைத்தல், சுயதொழில் செய்ய மாற்றுத்திறனாளிகளுக்கு எளிதில் வங்கி கடன் வசதி கிடைக்க செய்தல் போன்றவற்றிற்கான நடவடிக்கையும் அரசு மேற்கொள்ள வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.