கல்லூரி மாணவர்களுக்கு தடுப்பூசி! – தமிழக அரசு தீவிரம்!
தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் குறைந்துள்ள நிலையில் செப்டம்பர் 1 முதல் கல்லூரிகளை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கல்லூரி பணியாளர்கள், பேராசிரியர்கள் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்க வேண்டும் போன்ற வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்நிலையில் 18 வயதிற்கு மேற்பட்ட கல்லூரி மாணவர்களுக்கும் தடுப்பூசி போட தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. செப்டம்பர் 1 முதல் 18 வயதிற்கு மேற்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு முகாம்கள், மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.