முதல் தலைமுறை வாக்காளர்கள் தமிழகத்தை சீரமைக்கலாம் – கமல் வேண்டுகோள்!
நடிகர் கமல் கோவையில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல் தலைமுறை வாக்காளர்களை தமிழகத்தை சீரமைக்க வாக்களிக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் அவர்கள் தற்போது இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் தற்போது கோயம்புத்தூரில் முகாமிட்டுள்ளார். அங்கு இரண்டாவது நாளாக நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர் இன்னும் மூன்று நம்முடைய வாழ்க்கையை இப்படியே தொடரப் போகிறோமா இல்லை சீரமைக்கப் போகிறோமா என்பது தெரியும். வாக்களிக்கப் போகிறவர்கள், அரை நூற்றாண்டு காலத் தமிழகத்தில் ஒரு சரித்திரத்தைப் படைத்துக் காட்டப் போகிறீர்கள்.ஆனால் மீண்டும் மீண்டும் தவறை செய்யாமல் மக்களை மனதை மாற்றி மாற்றத்துக்காக வாக்களிங்க சொல்லுங்கள் எனக் கூறியுள்ளார்.
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு நகர்ப்புறங்களில் கனிசமான வாக்குகள் நாடாளுமன்ற தேர்தலில் கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.