திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 11 ஜனவரி 2021 (13:57 IST)

மாண்புமிகுக்களே... காவலர்களுக்கு வேறு சோலி இல்லையோ? கமல் நக்கல் ட்விட்!!

குறிப்பாக கமல் தனது பிரச்சாரத்தின் போது அதிமுகவை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் விமர்சனம். 

 
தமிழக சட்டசபை தேர்தல் வரும் மே மாதத்தில் நடைபெறவுள்ளதால்,  அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்கள் பிரசாரத்தை தற்போதே தொடங்கிவிட்டன. குறிப்பாக கமல் தனது பிரச்சாரத்தின் போது அதிமுகவை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில், 
 
கோவை மக்களின் வரவேற்பு வழக்கமான ஆர்ப்பாட்டத்தோடு இருக்க, அரசின் வரவேற்பு ஆபாசமானதாக உள்ளது. போலீஸை வைத்தே கொடிக்கம்பங்களை வெட்டி வீழ்த்துவது, பேனர்களைச் சிதைப்பது, போஸ்டர்களைக் கிழிப்பது தொடர்கிறது. கொங்குமண்டலம் அதிமுகவின் கோட்டை என்கிற மாயை தகர்வது ஆளுங்கட்சிக்குத் தெரிந்துவிட்டதோ?
 
காவல் துறைக்குப் பல சோலிகள் இருக்கின்றன. நான் செல்லும் இடமெல்லாம் கொடிகளை அகற்ற, போஸ்டரைக் கிழிக்க, பேனர்களை அவிழ்க்க அவர்களைப் பயன்படுத்த வேண்டியதில்லை மாண்புமிகுக்களே... என பதிவிட்டுள்ளார்.