அரசியலுக்கா கூப்பிடுறோம்.. ஆதரவுதானே கேக்குறோம்! – மய்யம் மூவ்!

Prasanth Karthick| Last Modified திங்கள், 11 ஜனவரி 2021 (12:14 IST)
நடிகர் ரஜினிகாந்த் தன்னை அரசியலுக்கு அழைத்து வேதனைப்படுத்த வேண்டாம் என பேசியுள்ளது குறித்து கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்த நிலையில் உடல்நல குறைவால் அந்த திட்டத்தை கைவிட்டார். ஆனாலும் அவர் கட்சி தொடங்க வேண்டுமென அவரது ரசிகர்கள் நேற்று சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ரஜினி தனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என்றும், தன்னை வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரது இந்த வேண்டுகோள் ரசிகர்களுக்கு மட்டுமல்லாது அவரது ஆதரவை நாடும் பிற கட்சிகளுக்கு இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ரஜினியின் ஆதரவு பெறுவது ஆரம்ப கட்டம் முதலே மக்கள் நீதி மய்யம் பேசி வருகிறது. இதுகுறித்து பேசியுள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் “ரஜினியின் அறிக்கை குறித்து கருத்து எதுவும் சொல்வதற்கு இல்லை. அது அவரது முடிவு. ரஜினியிடம் ஆதரவு கேட்கும்போது உங்களுக்கு தெரியாமல் கேட்க மாட்டேன்” என கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :