புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 22 டிசம்பர் 2020 (08:23 IST)

ஸ்டாலின் 200ன்னு சொன்னது தொகுதிகள் இல்லை, கூட இருக்குறவங்களுக்கு கொடுக்கும் தொகை: கமல் கிண்டல்

சமீபத்தில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகள் கூட்டம் கூடியது என்பதும் இந்தக் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் ’வரும் தேர்தலில் 200 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்பது நமது குறிக்கோளாக இருக்க வேண்டும் என்றும், மிஷன் 200 என்பதை அனைவரும் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார் 
 
இந்த நிலையில் கமல்ஹாசன் அவர்களிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேட்டபோது ’அவர்கள் 200 என்று கூறியது தொகுதிகளாக இருக்காது என்றும், அவர்கள் தங்களுடன் இருப்பவர்களுக்கு கொடுக்கும் தொகையாக இருக்கும்’ என்று கிண்டலுடன் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஏற்கனவே திமுகவுக்கு ஆதரவாக டுவிட்டரில் எழுதுபவர்களுக்கு டுவீட் ஒன்றுக்கு 200 ரூபாய் கொடுக்கப்படுவதாக செய்திகள் பரவிக் கொண்டிருக்கும் நிலையில் அதை உறுதி செய்வது போல் கமல் கிண்டலுடன் ஸ்டாலின் கூறிய 200க்கு அர்த்தம் கூறியது திமுக தொண்டர்களை ஆத்திரப்பட வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
 
மேலும் திமுக மற்றும் கமலஹாசன் கட்சி கூட்டணி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் திமுகவை இந்த அளவுக்கு கிண்டல் செய்யும் கமல்ஹாசனுடன் இனி கூட்டணி இருக்குமா என்பது சந்தேகமே என்றும் கூறப்பட்டு வருகிறது