வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 22 டிசம்பர் 2020 (07:22 IST)

தேர்தல் நெருங்கும் வேளையில் திடீரென கவர்னரை சந்திக்கும் முக ஸ்டாலின்: என்ன காரணம்?

திடீரென கவர்னரை சந்திக்கும் முக ஸ்டாலின்: என்ன காரணம்
தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் பரபரப்பான இந்த சூழ்நிலையில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் அவர்களை இன்று திமுக தலைவர் முக ஸ்டாலின் சந்திக்க உள்ளார். அப்போது அவர் அதிமுக அரசு மீதும் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீதும் ஊழல் பட்டியலை அளிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
சட்டமன்ற தேர்தலை விரைவில் வரவுள்ளதை அடுத்து அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தை துவங்கியுள்ளன. இந்த நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் அவர்களை சந்திக்க உள்ளார்
 
அதிமுக அரசில் நடந்த தவறுகள், ஊழல்கள், அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியல் ஆகியவற்றை அவர் அளிப்பார் என்றும் இதனை அடுத்து அதிமுக அரசு மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொள்வார் என்றும் கூறப்படுகிறது 
 
அதிமுக ஆட்சி முடியும் தருவாயில் திடீரென திமுக தலைவர் முக ஸ்டாலின் அரசின் மீது ஊழல் பட்டியலை அளிக்க உள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது