செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: வியாழன், 19 அக்டோபர் 2017 (08:10 IST)

மோடி திட்டத்தை தெரியாமல் பாராட்டிவிட்டேன், மன்னித்துவிடுங்கள்: கமல்

பிரதமர் மோடியின் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பு வந்தவுடன் முதல் ஆளாக மத்திய அரசின் நடவடிக்கையை பாராட்டியது ரஜினியும் கமலும்தான். ஆனால் தற்போது இந்த நடவடிக்கையால் எந்தவித பயனும் இல்லை என்றும், கருப்புப்பணம் ஒழிந்ததாக கூறியதெல்லாம் ஸ்டண்ட் என்றும் தெரியவந்துள்ளது.



 
 
இந்த நிலையில் பிரபல வார இதழில் தொடர் எழுதி வரும் கமல்ஹாசன், 'மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை உண்மையாகவே கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கை என்று தெரியாமல் பாராட்டிவிட்டேன். இப்போது என் தவறை உணர்கிறேன், மன்னித்துவிடுங்கள் பொதுமக்களே என்று கூறியுள்ளார்
 
மேலும் மகாத்மா காந்தி கூட தவறு செய்தபோது மன்னிப்பு கேட்டிருக்கின்றார். அதேபோல் பிரதமர் மோடியும் தனது செயலுக்கு மக்களிடம் மன்னிப்பு கேட்டால் அவருக்கு இன்னொரு சலாம் சொல்ல காத்திருக்கின்றேன், அவர் மன்னிப்பு கேட்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்' என்று கூறியுள்ளார்.