திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 17 அக்டோபர் 2017 (15:54 IST)

பிக்பாஸ் முடிந்தவுடன் என்ன ஆச்சு உலக நாயகனுக்கு?

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய உலகநாயகன் கமல்ஹாசன் அந்த நிகழ்ச்சியை பிரபலப்படுத்துவதற்காக அரசியல் ஸ்டண்ட் அடிப்பதாக கூறப்பட்டது. அதை நிரூபணம் செய்வது போல் தினமும் ஒரு டுவீட், பத்திரிகையாளர் பேட்டி, அரசியல் கட்சி இதோ தொடக்கம், முரசொலி விழா, கேரள-டெல்லி முதல்வர்களுடன் சந்திப்பு உள்பட பொதுமேடையில் ரஜினியை மறைமுகமாக தாக்குதல், முதலமைச்சர் உள்பட அரசியல்வாதிகளை வறுத்தெடுப்பது போன்ற விறுவிறுப்பான நிகழ்வுகள் நடந்தது.



 
 
இதையெல்லாம் வைத்து கமல் இதோ அரசியலுக்கு வந்துவிட்டார் என்று அவரது ரசிகர்களும், நான் எப்போதோ அரசியலுக்கு வந்துவிட்டேன் என்றும் கமலும் கூறி வந்தனர். இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தது. அதோடு கமல்ஹாசனின் அரசியல் பரபரப்பும் முடிந்துவிட்டது.
 
தினமும் ஆக்டிவ் ஆக இருந்த டுவிட்டரிலும் அக்டோபர் 8ஆம் தேதிக்கு பின்னர் ஸ்டேட்டஸ் கிடையாது. என்ன ஆச்சு உலகநாயகனுக்கு என்று விசாரித்த போது அவர் தற்போது அடுத்த பட வேலையில் பிசியாக இருப்பதாகவும், அரசியலில் இப்போதைக்கு கவனம் செலுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது. அப்படியானால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக வெறும் பரபரப்பைத்தான் ஏற்படுத்தினாரா உலகநாயகன்? என்ற சந்தேகம் தற்போது வலுக்கின்றது. பதில் சொல்வாரா கமல்?