பிரதமர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து: பெரும் பரபரப்பு
டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகம் 24 மணி நேரமும் பாதுகாப்புடன் உள்ள அலுவலகமாக இருக்கும் நிலையில் இந்த அலுவலகத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரதமர் அலுவலகத்தின் இரண்டாவது மாடியில் உள்ள அறை எண் 214ல் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டதாகவும் இதுகுறித்த தகவல் அறிந்தவுடன் உடனே விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஒருசில நிமிடங்கள் போராடி தீயை அணைத்ததாகவும் உறுதி செய்யப்பட்ட தகவல்கள் வெளிவந்துள்ளது
இந்த தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்றும் இந்த தீவிபத்தால் உயிரிழப்போ பெரிய அளவில் பொருள் இழப்போ இல்லை என்றும் தீயணைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த தீவிபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்த விசாரணை தொடங்கிவிட்டதாகவும் தெரிகிறது.