வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 19 ஜூன் 2018 (16:40 IST)

18 எம்.எல்.ஏக்கள் தீர்ப்பை விமர்சனம் செய்தவர்கள் மீது நடவடிக்கை: நீதிபதி கிருபாகரன்

சமீபத்தில் தினகரன் ஆதரவாளர்கள் 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு வெளியானது. இந்த தீர்ப்பில் சபாநாயகர் உத்தரவு செல்லும் என்று ஒரு நீதிபதியும், செல்லாது என்று இன்னொரு நீதிபதியும் தீர்ப்பளித்தனர். இதனால் இந்த வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு சென்றுள்ளது.

இந்த நிலையில் இந்த தீர்ப்பு குறித்து அரசியல் தலைவர்களும், சமூக வலைத்தள பயனாளிகளும் சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்தனர். நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கையை தான் இழந்துவிட்டதாக 18 எம்.எல்.ஏக்களில் ஒருவர் கூறியது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது

இந்த நிலையில் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை விமர்சித்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது பற்றி 2 வாரத்தில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதி கிருபாகரன் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். இதனால் இந்த தீர்ப்பை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.