Daily Horoscope
✕

சரவணபவன் ஜீவஜோதியின் அடுத்த நகர்வு – அரசியல் களத்தில் ….

Updated: வெள்ளி, 13 டிசம்பர் 2019 (14:33 IST)
சரவணபவன் அண்ணாச்சியால் கணவனை இழந்த ஜீவஜோதி இப்போது பாஜகவில் சேர்ந்துள்ளார்.

தமிழகம் முழுவதும் பிரபலமான வழக்கான சரவணபவன் ராஜகோபால் – ஜீவஜோதி – பிரின்ஸ் சாந்தகுமார் வழக்கு கடந்த ஆண்டு இறுதியில் தீர்ப்பளிக்கப்பட்டது. ஜீவஜோதியின் கணவரைக் கொன்றதற்காக சரவண பவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

ஆனால் சிறை சென்ற சில வாரங்களிலேயே உடல்நலக் கோளாறு காரணமாக அவர் உயிரிழந்தார். வழக்கு நடந்த காலங்களில் தஞ்சாவூரில் தங்கி தையல் பயிற்சி நிறுவனம் ஒன்றை நடத்திவந்த ஜீவஜோதி இப்போது பாஜகவில் இணைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதுபற்றி விசாரிக்கையில் ஜீவஜோதி பாஜகவில் இணைந்தது உண்மைதான் என்றும் அவரது கணவர் வழி  உறவினரான கருப்பு முருகானந்தம்தான் அவரை பாஜகவில் இணைய வைத்துள்ளார் என்றும் சொல்லப்படுகிறது. விரைவில் அவருக்கு பொறுப்புகள் ஏதேனும் வழங்கப்படும் என சொல்லப்படுகிறது.
 

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments