செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 13 டிசம்பர் 2019 (13:29 IST)

அயோத்தியில் ராமர் கோயில் கட்டினால் ... நித்யானந்தா.. புதிய வீடியோ வெளியீடு!

நித்யானந்தா, இமயமலைச் சாரலில்  பதுங்கி இருப்பதை, உளவுத்துறை அமைப்பு கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அயோத்தியில் ராமர் கோயில் கட்டினால் இந்தியா பொருளாதார ரீதியில் செழிக்கும் என  நித்யானந்தா இன்று புதிய வீடியோவில் வீடியோவில் கூறியுள்ளார்.
சமீபத்தில் நித்தியானந்தாவின் முன்னாள் உதவியாளர் ஜனார்தா சர்மா, தனது இரு மகள்களை அடைத்து  வைத்து நித்யானந்தா கொடுமைப்படுத்துவதாக அளித்த புகாரின் பேரில், நித்யானந்தா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து குஜராத்தில் உள்ள அவரது ஆசிரமத்துக்கு சீல் வைக்கப்பட்டது.
 
இந்தப் புகாரை அடுத்து  சிறுமிகளை தொந்தரவு செய்தது தொடர்பாக, நித்யானந்தா மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்த நிலையில், அவர்  தப்பி ஓடியதாக தகவல்கள் வெளியானது.
 
ஆனால், அதை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுத்தது. அதனால், போலீஸார் நித்யானந்தாவை வலை வீசித் தேடி வருகின்றனர்.
 
இந்நிலையில், சர்ச்சைகளில் சிக்குவதையே வாடிக்கையாக கொண்டுள்ள நித்யானந்தா, கைலாஷ் என்ற பெயரில் ஒரு தனித் தீவை வாங்கி அதில் தனிநாடு அமைக்கப் போவதாக கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
 
நித்யானந்தா, தென் அமெரிக்கா நாடான ஈகவெடார் அருகில் ஒரு தீவை விலைக்கு வாங்கி அதில் விர்டுவல் ஹிந்து என்ற பெயரில் ஒரு நாட்டை உருவாக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.
 
இந்நிலையில், நித்தியானந்தா, தற்போது, இமயமலைச் சாரலில்  பதுங்கியுள்ளதாக  தகவல் வெளியாகிறது. அதனால், உளவுத்துறை அமைப்பு அவரை ரகசியமாக கண்காணித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகிறது.
 
இந்நிலையில். நித்யானந்தாவை கண்டுபிடிக்க வேண்டுமென போலீஸாருக்கு உத்தரவு பிறக்கப்பட்டுள்ள நிலையில், இன்று நித்யானந்தா தனது பேஸ்புக்  பக்கத்தில் ஒரு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில், அவர் கூறியுள்ளதாவது :
 
’சிவத்தை உணர்ந்தால் பக்தர்களாகிய உங்களுக்கு கைலாசா உருவாகும். எனது அடுத்த இலக்காக இருப்பது ஸ்ரீலங்காவில் உள்ள நல்லை திருஞான சம்பந்தர் ஆதீனம் தான். நான் அரசியல் குறித்து எதையும் பேசவில்லை. ஆனால் அயோத்தியில் ராமன் கோயில் கட்ட உதவி செய்தால்  நமது இந்தியப் பொருளாதாரத்துக்கு பங்களிப்பது ஆகும்.
 
எனது சீடர்களும், சந்நியாசிகளும் தங்களால் முடிந்தளவு ராமர் கோயில் கட்டுவதற்கு உதவ வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். மேலும், என்னிடம் ஒன்றுமில்லை என நான் சொல்லவில்லை. நானும் ராமன் கோவிலுக்கு பங்களிப்பேன். லட்சுமி என்னுடன் இருக்கிறார்’ என தெரிவித்துள்ளார்.