புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By mahendran
Last Modified: புதன், 22 செப்டம்பர் 2021 (16:18 IST)

பெண் குழந்தையை விற்ற தம்பதிகள்… போலிஸார் துரித நடவடிக்கை!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்த தம்பதிகள் தங்கள் 3 மாத பெண் குழந்தையை விற்றுள்ளனர்.

ஜெயங்கொண்டம் அருகே உள்ள வடவீக்கம் எனும் கிராமத்தைச் சேர்ந்த தம்பதிகள் சரவணன் மற்றும் மீனா. இவர்களுக்கு நான்கு குழந்தைகள். நான்குமே பெண் குழந்தைகள். இந்நிலையில் இவர்கள் தங்கள் நான்காவது பெண் குழந்தையை நாமக்கல்லைச் சேர்ந்த ஒரு குழந்தை இல்லாத தம்பதியினருக்கு தரகர்கள் மூலம் விற்றுள்ளனர்.

இது சம்மந்தமாக ஜெயங்கொண்டம் காவல்துறையினருக்கு தகவல் தெரிந்தவுடனே அவர்களை அணுகிய போது குழந்தையை விற்றதை ஒப்புக்கொண்டுள்ளனர். இதையடுத்து அவர்களைக் கைது செய்த போலிஸார் குழந்தையையும் மீட்டுள்ளனர்.