ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 19 செப்டம்பர் 2021 (10:07 IST)

குறும்பு செய்த சிறுவன்… அடித்த அக்கா- நொடிப்பொழுதில் நேர்ந்த சோகம்!

சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூரில் மர்மமான முறையில் இறந்த சிறுவனின் அக்கா கைது செய்யபப்ட்டுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரைச் சேர்ந்த சூசை மேரி என்பவர். இவருக்கு இரண்டு குழந்தைகள். வேலைக்கு செல்லும் இவர் தனது குழந்தைகளை அக்கா மகளான மேரியிடம் ஒப்படைத்து விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் 5 வயது சிறுவனான ஆபேல் மயங்கி விழுந்துவிட்டதாக மேரி சூசை மேரிக்கு தகவல் சொல்லியுள்ளார்.

மருத்துவமனைக்கு சிறுவனைத் தூக்கிச் சென்ற நிலையில் அவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மர்ம மரணம் என வழக்குப் பதிவு செய்த நிலையில் உடல் கூறாய்வுக்கு அனுப்பப்பட்டது. அப்போது தலையில் ரத்தம் உறைந்திருந்தது தெரியவந்துள்ளது. இதனால் சிறுவன் தாக்கப்பட்டு இருப்பது உறுதியானது.

பின்னர் சிறுவனின் அக்கா மேரியிடம் விசாரணை செய்த போது அவர் ‘ஆபேல் குறும்பு செய்ததால் அடித்தேன்’ எனக் கூறியுள்ளார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.