திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj
Last Modified: வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (22:58 IST)

குழந்தை பெற்றெடுத்தால் பணம் உதவி…

உலகில் மக்கள் தொகை அதிகம் உள்ள நாடு சீனா. இந்நிலையில், அங்கு 3 வது குழந்தை பெற்றெடுத்தால் அரசு பண உதவி செய்யும் என அறிவித்துள்ளது.

 உலகளவில் அதிக மக்கள்தொகை உள்ள நாடு சீனா. இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது.

கடந்தாண்டு சீனாவில் இருந்து கொரோனா தொற்றுப் பரவியதை அடுத்து, இனிவரும் ஆண்டுகளில் அங்கு இளம் வயதினர் எண்ணிக்கை குறையும் எனவும் 3 வது குழந்தையப் பெற்றெடுக்கும் பெற்றோருக்கு அரசு நிதியுதவி அளிக்கும் என அந்நாட்டின் லின்ஸே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதில், 3 வது குழந்தை பிறந்தால் ரூ. 57 ஆயிரம் ரொக்கத்தொகையும், அந்தக் குழந்தை குறிப்பிட்ட வயதை எட்டியதும் ரூ. 1 லட்சம் தொகை பெற்றோருக்கு வழங்கப்படும் எனக் கூறியுள்ளது.