ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 18 செப்டம்பர் 2021 (10:50 IST)

14 வயது சிறுமிக்கு பிறந்த குழந்தை… கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் நடந்த பிரசவம்!

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 14 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆவடிப் பகுதியைச் சேர்ந்தவர் அந்த சிறுமி. 14 வயதாகும் அவர் 9 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனோடு அவருக்கு பழக்கம் ஏற்படவே, அவர்கள் காதலித்து நெருக்கமாகி உள்ளனர்.

இருவரும் பாலியல் உறவு வைத்துக்கொள்ளும் அளவுக்கு அவர்கள் உறவு நெருக்கமாகியுள்ளது. இதனால் சிறுமி கர்ப்பமாகியுள்ளார். இதையறிந்த அவர்களின் பெற்றோரும் அவர்களை சேர்ந்து வாழவைத்துள்ளனர்.

இந்நிலையில் பெண்ணுக்கு நேற்று முன்தினம் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பிரசவம் நடந்துள்ளது. அங்கே அவருக்கு பெண்குழந்தை பிறந்துள்ளது. சிறுமியின் வயதை பற்றி அறிந்த மருத்துவமனையைச் சேர்ந்தவர்கள் உடனடியாக போலிஸாருக்கு புகாரளித்துள்ளனர். இது சம்மந்தமாக வழக்குப் பதிவு செய்த போலிஸார் அந்த 17 வயது சிறுவனை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

சிறுமியும் குழந்தையும் மருத்துவ சிகிச்சைகள் முடிந்த பின்னர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட உள்ளனர்.