வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 19 மார்ச் 2021 (09:14 IST)

பிரச்சாரத்திற்கு போன இடத்தில் நாய்க்குட்டியோடு விளையாட்டு! – அமைச்சரின் ஜெயக்குமார் புகைப்படம் வைரல்!

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் ஜெயக்குமார் பிரச்சாரம் சென்ற இடத்தில் நாய்க்குட்டியோடு விளையாடிய புகைப்படம் வைரலாகி வருகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக தீவிரமான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக சார்பில் ராயப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் ஜெயக்குமாரும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அமைச்சர்களிலேயே ஜாலியான அமைச்சராக அறியப்படும் ஜெயக்குமார் விழாக்களில் எம்.ஜி.ஆர் பாடலை மேடையில் பாடுவது, குத்துச்சண்டை வீரர்களோடு குஸ்தி போடுவது என குறும்பாக செய்யும் பல விசயங்கள் இதற்கு முன் வைரலாகியுள்ளன. அந்த வகையில் சமீபத்தில் தேர்தல் பிரச்சாரம் சென்ற ஜெயக்குமார் அங்கு இருந்த நாய்க்குட்டி ஒன்றை தூக்கி கொஞ்சி விளையாடியுள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.