சந்தானம் மீது கடுப்பான ரசிகர்கள்… அப்படி என்ன செய்தார் தெரியுமா?

Last Modified வெள்ளி, 19 மார்ச் 2021 (08:41 IST)

நடிகர் சந்தானம் ஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவ்வுக்கு ஆதரவாக பேசியிருப்பது ரசிகர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகக்கோயில்களைப் பாதுகாக்க அவற்றைப் பக்தர்களிடமே தமிழக அரசு வழங்க வேண்டுமென ஈஷா அறக்கட்டளை நிறுவனம் சத்குரு கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட டுவீட்டை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் மற்றும் நடிகர் ரஜினிகாந்திற்கு அவர் டேக் செய்திருந்தார்.

இந்த கருத்துக்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்பு எழுந்த நிலையில் நடிகர் சந்தானம் அவருக்கு ஆதரவாக டிவீட் செய்திருந்தார். மேலும் அவருடனான நேர்காணல் ஒன்றிலும் இந்த கருத்தை மறுபடியும் ஆதரித்து பேசினார். ஜக்கி வாசுதேவ் காட்டை அழித்து ஈஷா யோகா மையம் அமைத்திருப்பதாகவும், வனவிலங்குகளின் பாதையை தடுப்பதாகவும் அவர் மேல் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில் சந்தானம் அவரை ஆதரித்திருப்பது அவரின் ரசிகர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதில் மேலும் படிக்கவும் :