வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 19 மார்ச் 2021 (08:29 IST)

சீமானின் ஆண்டு வருமான விவரம் மாற்றம்! எவ்வளவு தெரியுமா?

சட்டமன்ற தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்த சீமான் ஆண்டு வருமான ஆயிரம் ரூபாய் என குறிப்பிட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது அதை மாற்றி புதிய பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். வேட்பு மனுவுடன் தாக்கல் செய்யப்பட்ட விவரத்தில் ஆண்டு வருமானம் ரூ.1000 என குறிப்பிடப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் விண்ணப்பம் பூர்த்தி செய்ததில் தவறு நிகழ்ந்துள்ளதாக நாம் தமிழர் கட்சி விளக்கம் அளித்தது.

இந்நிலையில் தற்போது புதிய பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ள சீமான் தனது ஆண்டு வருமானம் ரூ. 4,72,900 என குறிப்பிட்டுள்ளார். அதேபோல சீமான் மனைவி கயல்விழி குறித்த விவரங்களில் அவருக்கு ஆண்டு வருமானம் இல்லை என முன்னர் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் தற்போது 2,82,900 ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது.