1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 7 மே 2021 (17:14 IST)

தமிழகத்தில் புதிய தலைமை செயலாளர் இவர்தான்: அதிரடி அறிவிப்பு

தமிழகத்தில் புதிய தலைமை செயலாளர் இவர்தான்: அதிரடி அறிவிப்பு
தமிழகத்தின் முதல்வராக இன்று முக ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்றுக் கொண்டார் என்பதும் அவரை தொடர்ந்து 33 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டார் என்பதும் தெரிந்ததே
 
மேலும் முதல்வரின் தனி செயலாளர்களாக ஐஏஎஸ் அதிகாரிகளை உதயச்சந்திரன், உமாநாத், சண்முகம் மற்றும் அனுஜார்ஜ் ஆகிய நான்கு பேர் நியமனம் செய்யப்பட்டார்கள்
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி தமிழக அரசின் தலைமை செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இதுவரை தலைமைச் செயலாளராக இருந்த ராஜீவ் ரஞ்சன் அவர்கள் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் நிர்வாக இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார் 
 
இறையன்பு ஐஏஎஸ் அவர்கள் தமிழக அரசின் தலைமை செயலாளராக நியமனம் செய்யப்பட்டதை அடுத்து தமிழகத்தில் நிர்வாகம் ஜெட் வேகத்தில் இருக்கும் என்று நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்