திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 7 மே 2021 (15:39 IST)

இன்னும் சில தினங்களில் அமைச்சரவை விரிவாக்கம்: உதயநிதி பெயர் இடம்பெறுமா?

தமிழக முதலமைச்சராக இன்று முக ஸ்டாலின் அவர்களும் அவரை தொடர்ந்து 33 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். இந்த நிலையில் அமைச்சர்கள் பட்டியலில் உதயநிதி பெயர் இடம்பெறும் என்று எதிர்பார்த்த நிலையில் அவருடைய பெயர் இடம் பெறவில்லை. ஆனால் அவருடைய நெருங்கிய நண்பரான அன்பில் மகேஷ் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக பொறுப்பேற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் திமுக வட்டாரங்களில் இருந்து கசிந்த தகவலின்படி இன்னும் சில தினங்களில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. அவ்வாறு அமைச்சரவை விரிவாக்கம் செய்யும்போது உதயநிதியின் பெயரும் அதில் இருக்கும் என்றும் அவருக்கு முக்கியத் துறை ஒன்று வழங்கப்படும் என்றும் செய்திகள் கசிந்து இருக்கிறது
 
ஆனால் அதே நேரத்தில் உதயநிதிக்கு இன்னும் அனுபவம் வரவேண்டும் என்றும் அவருக்கு ஓரிரு ஆண்டுகள் கழித்தே அமைச்சர் பதவியை முக ஸ்டாலின் கொடுப்பார் என்றும் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். இருப்பினும் இன்னும் சில தினங்களில் விரிவாக்கப்படும் அமைச்சரவையில் உதயநிதிக்கு இடம் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்