வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By
Last Modified: வியாழன், 6 மே 2021 (20:15 IST)

அமைச்சகங்களின் துறை பெயர்மாற்றம் செய்யப்பட்டது ஏன்? முக ஸ்டாலின் விளக்கம்

முக ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பட்டியல் நேற்று வெளியான நிலையில் ஒருசில அமைச்சகங்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. இதுகுறித்து தமிழக முதல்வராக பதவி ஏற்க இருக்கும் முக ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
 
உலக அளவில் கடைப்பிடிக்கப்படும் உயர்ந்த செயல்பாடுகளை மனத்தில் வைத்தும், தமிழக அரசு ‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என்கின்ற சிறந்த நோக்கத்தின் அடிப்படையிலும் இந்தப் பெயர் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. இவை வெறும் பெயர் மாற்றமாக இல்லாமல் செயல்பாட்டிலும் மிகப்பெரிய மாற்றங்களைத் திட்டங்களாகக் கொண்டு செயல்படத் தூண்டுகோல்களாக இருக்கும்.
 
பெயர் மாற்றம் செய்யப்பட்ட துறைகள்:
 
வேளாண்மை துறை - உழவர் துறை 
 
சுற்றுச்சூழல் துறை - காலநிலை மாற்றத்துறை 
 
மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறை 
 
மீன் வளம் - மீனவர் நலத்துறை 
 
தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டு துறை 
 
செய்தி மக்கள் தொடர்பு துறை - செய்தி துறை
 
சமூக நலன் - மனித உரிமை துறையாகவும்
 
நிர்வாக சீர்திருத்தத்துறை -  மனிதவள மேம்பாட்டுத் துறை 
 
வெளிநாடு வாழ் இந்தியர்கள் - வெளிநாடு வாழ் தமிழர் நலன்