1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 23 ஜூலை 2021 (16:51 IST)

இந்திய அளவில் அதிக கொரோனா கழிவுகள்! – தமிழகம் எத்தனையாவது இடம்?

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் இருந்து வரும் நிலையில் கொரோனா மருத்துவ கழிவுகளை அதிகம் வெளியேற்றும் மாநிலங்கள் குறித்து மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து வரும் நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதேசமயம் கொரோனா பரவலை தடுக்க மக்கள் மாஸ்க், சானிட்டைசர் போன்றவற்றை அவசியம் பயன்படுத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மக்கள் அதிகமாக மாஸ்க், சானிட்டைசர் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தும் நிலையில் அவற்றால் ஏற்படும் கழிவுகளும் அதிகரித்துள்ளன. இதுத்தவிர மருத்துவமனை கொரோனா கழிவுகளுமாக நாட்டிலேயே அதிக கொரோனா மருத்துவ கழிவுகளை வெளியேற்றும் மாநிலங்களில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது.

2020ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கடந்த ஜூன் மாதம் வரை மொத்தமாக 4,835 டன் மருத்துவ கழிவுகள் தமிழகத்தில் அகற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.