1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 23 ஜூலை 2021 (17:14 IST)

போலீஸாருக்கு டிஜிபி சைலேந்தர் பாபு உத்தரவு !

போலீஸாருக்கு டிஜிபி சைலேந்தர் பாபு  உத்தரவு !
சமீபத்தில் தமிழக காவல்துறை டிஜிபி திரிபாதி பணியிலிருந்து ஓய்வு பெற்றார். இதையடுத்து, தமிழகத்தின் அடுத்த காவல்துறை இயக்குநர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்நிலையில், கடும் போட்டிகளுக்கு இடையே கோவை வேளாண் பல்கலைக் கழகத்தில் படித்த ஐபிஎஸ் அதிகாரி சைலேந்தர் பாபுவை தமிழக அரசு நியமித்தது.

இன்று காவல்துறை இயக்குநர் சைலேந்தர் பாபு ஒரு முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், தமிழகக் காவல்துறையினர் சொந்தத் தேவைக்காகப் பயணம் மேற்கொள்ளும்போது, கட்டாயம் டிக்கெட் எடுத்துச் செல்லவேண்டுமென தெரிவித்துள்ளார்.