திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 17 மார்ச் 2021 (19:14 IST)

திமுக, மதிமுக, மநீம பிரமுகர்கள் வீடுகளில் ஐடி ரெய்டு!

மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசு தனக்கு எதிரானவர்களை வருமான வரி அதிகாரிகள் ஏவிவிட்டு பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் என்று ஏற்கனவே குற்றச்சாட்டு இருந்து வருகிறது 
 
இந்த நிலையில் தமிழகத்தில் அதிமுக பாஜக கூட்டணியை எதிர்த்து திமுக கூட்டணி மற்றும் மக்கள் நீதி மய்யம் கூட்டணி போட்டியிடும் நிலையில் இன்று திடீரென திமுக, மதிமுக, மக்கள் நீதி மய்யம்ன் பிரமுகர்களின் வீடுகளில் வருமான வரித் துறையினர் ரெய்டு செய்திருப்பதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தாராபுரம் மதிமுக மாவட்ட துணை செயலாளர், தாராபுரம் திமுக நகர செயலாளர், மக்கள் மற்றும் மக்கள் நீதி மய்யம் பொருளாளர் ஆகியோர் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
ஆனால் அதே நேரத்தில் அதிமுக, பாமக, பாஜக பிரமுகர்களின் வீடுகளில் வருமான வரி சோதனை இல்லை என்பதால் இது பழிவாங்கும் நடவடிக்கை என எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்