தமிழகத்தில் ரூ. 1000 யாருக்கு? குவிந்த விண்ணப்பங்கள் !

sinoj| Last Modified திங்கள், 5 ஜூலை 2021 (17:14 IST)

தமிழகத்தில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள திமுக குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 வழங்குவதாக தேர்தல் பிரச்சாரத்தில் அறிவித்தது.

இதுகுறித்து
இன்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியதாவது: குடும்பத்தலைவிகளுக்கு
மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.

மேலும், குடும்ப அட்டையில் குடும்பத்தலைவியின் பெயர் முதலில் இருந்தால் மட்டும்தான் இந்தத் தொகை வழங்கப்படும் என்ற ஒரு தகவல் வெளியானது. இதனால் குடும்ப அட்டையில் குடும்பத்தலைவருக்கு முன் குடும்பத்தலைவியின்
பெயர் இடம்பெறச் செய்ய விண்ணப்பங்கள் கொடுத்த வண்ணம் உள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :