தத்துவம் இல்லாத அரசியல்!.. உங்களை கொன்னு கூட அவன் ஜெயிப்பான்!.. இளவரசு யாரை சொல்றாரு!..

திங்கள், 6 ஜூலை 2026 (18:39 IST)
தமிழக அரசியலில் 6 வருடங்களுக்கு பின் அதிமுக, திமுக இல்லாத ஒரு கட்சி ஆட்சிக்கு வந்திருக்கிறது. அதுவும் கட்சி துவங்கி இரண்டு வருடங்களில் அக்கட்சியின் தலைவர் விஜய் தமிழ்நாட்டுக்கு முதலமைச்சராக மாறியிருக்கிறார்.  இது ஆச்சரியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

சுமார் ஒரு கோடியே 75 லட்சம் பேர் தவெகவுகு வாக்களித்துள்ளனர்.  108 தொகுதிகளில் தவெக வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்திருக்கிறது. குழந்தைகள் மூலமாகவும், இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோக்களை போட்டு தவெக வெற்றி பெற்றுவிட்டதாக் திமுக தொடர்ந்து சொல்லி வருகிறது. மேலும், தவெக எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்களை திமுக கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. இந்த கட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் தொடர்ந்து பேசி வருகிறார்.

இதற்கெல்லாம் தவெகவும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் ஒரு டிவி நிகழ்ச்சியில் பேசிய நடிகர் இளவரசு ‘எந்த விதமான தத்துவமும் இல்லாமல் இருக்கும் அரசியல் நீண்ட காலம் நிலைத்து நிற்காது.. நிச்சயம் வெற்றி பெறாது.. குருட்டுத்தனமான விசுவாசம் வேலைக்கு ஆகாது.. உங்களை கொன்று கூட நாளை அவன் வெற்றி பெறலாம்.. ஆனால் அது சமூகத்திற்கு நல்லது அல்ல.. இந்த விஷயத்தை தெளிவாக சொன்ன திரைப்படம் பாரதிராஜா இயக்கிய என்னுயிர் தோழன். அந்த படத்தை இந்த கால இளைஞர்கள் பார்க்க வேண்டும்.. அப்படம் எல்லா காலத்துக்கும் பொருந்தும்’ என அவர் கூறியிருக்கிறார். இதையடுத்து இளவரசு யாரை சொல்கிறார் என பலரும் விவாதம் செய்து வருகிறார்கள்.<>

எல்லாம் காட்டு

மீண்டும் 50% வரிவிதித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்... திருந்தவே மாட்டாரா?

உக்ரைன் நாட்டின் கப்பல் மீது தாக்குதல்.. 4 இந்தியர்கள் பலி.. மத்திய அரசு கடும் கண்டனம்..

ஆந்திராவை தொடர்ந்து பீகாரிலும் கொரோனா.. தந்தை மகள் மருத்துவமனையில் அனுமதி...

ஆன்லைன் மூலம் இனி சுங்கச்சாவடி மாதாந்திர பாஸ்.. புதிய செயலி அறிமுகம்...

பழனி கோவில் நில விவகாரத்தில் நடந்தது என்ன?.. பத்திரம் சொல்வது என்ன?..

அடுத்த கட்டுரையில்
Show comments