1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 2 மே 2024 (08:35 IST)

பாஜக ஜெயித்தால் மோடி பிரதமராக வேண்டாம்.. சுப்பிரமணியன் சுவாமி பேட்டி..!

பாரதிய ஜனதா கட்சி ஒருவேளை வெற்றி பெற்றால் மோடி பிரதமராக வேண்டாம் என்றும் வேறொருவரை பிரதமராக தேர்வு செய்ய வேண்டும் என்றும் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

பாஜகவின் மூத்த தலைவராக இருந்தாலும் சுப்பிரமணியசாமி அடிக்கடி பாஜகவுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வருவார் என்பது குறிப்பாக பிரதமர் மோடிக்கு எதிராக தனது கருத்துக்களை அவர் பலமுறை தெரிவித்துள்ளார் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த சுப்பிரமணியசாமி ஒருவேளை பாஜக வெற்றி பெற்றால் இரண்டு முறை பிரதமர் ஆன மோடியை மீண்டும் பிரதமராக்க வேண்டாம் என்றும் வேறொரு தலைவரை பிரதமராக வேண்டும் என்றும் அவர் கூறினார். இருப்பினும் மோடிக்கு பதிலாக வேறு யாரை பிரதமராக வேண்டும் என்ற கேள்விக்கு அவர் பதில் கூறவில்லை

கடந்த 10 ஆண்டுகளாக பாஜக எந்த ஒரு நலத்திட்டத்தையும் செய்யவில்லை என்றும் பாஜக தேர்தல் பிரச்சாரத்தில் வெறுப்பு பிரச்சாரம் தான் அதிகம் இருக்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பிரதமர் மோடியை வாரணாசியில் இந்துக்கள் தோற்கடிக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva