தடையை மீறி மதுரையில் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும்: அண்ணாமலை
மதுரையிலிருந்து சென்னை வரை நீதி கேட்டு போராட்டம் நடைபெறும் என்று பாஜக சமீபத்தில் அறிவித்திருந்த நிலையில், மதுரையில் இந்த போராட்டத்தை தொடங்குவதற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. ஆனால், தடையை மீறி போராட்டம் நடைபெறும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடுமையை கண்டித்து, மதுரையில் பாஜக மகளிர் அணி சார்பில் இன்று நீதிப்பேரணி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. மேலும், அனுமதி இல்லாமல் பேரணி நடத்தினால் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சற்றுமுன் திட்டமிட்டபடி மதுரையில் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார். இன்று தொடங்கும் பாஜகவின் நீதிப்பேரணி சென்னை வரை சென்று, அதன் பின்னர் தமிழக கவர்னர் இடத்தில், அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் நேர்மையான விசாரணை வேண்டும் என கோரிக்கை விடுத்து மனு அளிக்க உள்ளனர்.
இந்த நிலையில், இன்று தடையை மீறி பாஜக மகளிர் அணியினர் போராட்டம் நடத்தினால் கைது செய்யப்படுவார்கள் என்பதால், மதுரையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Edited by Siva