பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை மாற்றப்படுகிறாரா? தமிழிசைக்கு கிடைத்த புதிய பதவி..!
தமிழக பாஜக தலைவரை தேர்வு செய்ய தேர்தல் அதிகாரியாக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் பாஜக தேசிய அளவிலான உறுப்பினர் சேர்க்கையை தொடர்ந்து அமைப்பு தேர்தல் தீவிரமாக நடைபெற்று வருகிறது
ஒவ்வொரு மாநிலங்களிலும் பாஜகவின் மாவட்ட தலைவர்கள், மாநில தலைவர்களை தேர்வு செய்யும் பணியும் தீவிரம் அடைந்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் பாஜகவின் புதிய தலைவர்களை தேர்வு செய்ய மத்திய தேர்தல் அதிகாரிகளை பாஜக நியமித்துள்ளது
புதுச்சேரி மாநில பாஜக தலைவரை தேர்வு செய்வதற்காக தேர்தல் அதிகாரியாக தரும் சூக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அந்தமான் யூனியன் பிரதேச பாஜக தலைவரை தேர்வு செய்வதற்காக தமிழிசை சௌந்தரராஜன் தேர்தல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் பாஜக புதிய தலைவர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தமிழகத்தை பொறுத்தவரை அண்ணாமலை மீண்டும் தலைவராக நியமனம் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக பாஜக தலைவராக தமிழிசை சௌந்தரராஜன் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு அந்தமான் யூனியன் பிரதேச பாஜக தலைவரை தேர்வு செய்ததற்கான பணி கொடுத்துள்ளதால் அவர் தமிழக பாஜக தலைவராக நியமனம் செய்ய வாய்ப்பு இல்லை என பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
Edited by Siva