ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : புதன், 1 மே 2024 (16:38 IST)

விஸ்வரூபம் எடுக்கும் ஆபாச வீடியோ விவகாரம்.! பிரதமர் மோடிக்கு கர்நாடக முதலமைச்சர் கடிதம்..!!

Sitharamaya
ஆபாச வீடியோ விவகாரத்தில் சிக்கிய முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் ஹாசன் தொகுதி எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணாவை இந்தியா அழைத்து வர தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதி உள்ளார்.
 
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி, கர்நாடகாவில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வருகிறது. அம்மாநிலத்தில் முதல்கட்டமாக 14 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில், வரும் மே 7ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் ஹாசன் தொகுதி எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார்.

2000-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள்?
 
கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி வாக்குப்பதிவுக்கு முன்னதாக ஹாசன் தொகுதி முழுவதும் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் பகிரப்பட்டன. 300க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து அதனை வீடியோக்களாக பிரஜ்வல் ரேவண்ணா பதிவு செய்து வைத்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

வாக்குப்பதிவுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு, ஹாசன் தொகுதி முழுவதும் 2,000-க்கும் மேற்பட்ட பென் டிரைவ்கள் விநியோகிக்கப்பட்டதாக தெரிகிறது. பேருந்து இருக்கைகள், பூங்காக்கள் போன்ற பொது இடங்களில் மக்களுக்கு அந்த பென் டிரைவ்கள் விநியோகிப்பட்டதாக கூறப்படுகிறது.
 
அந்த பென் டிரைவ்களில் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அடங்கிய 2000-க்கும் மேற்பட்ட ஆபாச கிளிப்புகள் இருந்ததாக சொல்லப்படுகிறது.  இதனால் பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்தனர். 
 
வீட்டு பணிப்பெண் பாலியல் புகார்:
 
இதற்கிடையே பிரஜ்வல் ரேவண்ணா வீட்டு பணிப்பெண் போலீசில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். ரேவண்ணாவும், அவரது மகன் பிரஜ்வல் ரேவண்ணாவும் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பணிப்பெண் கூறியுள்ளார். ரேவண்ணாவும், அவரது மகன் பிரஜ்வல் ரேவண்ணாவும் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பணிப்பெண் கூறியுள்ளார்.
 
மேலும் தன்னுடைய மகளிடமும் பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டியிருந்தார். வீடியோ காலில் அருவருக்கத்தக்கச் செயல்களில் ஈடுபட்டதால் அவரின் செல்போன் எண்ணை தனது மகள் ப்ளாக் செய்து விட்டதாகவும் தெரிவித்தார். மேலும், பிரஜ்வலின் தாயார் வீட்டில் இல்லாத நேரம் பல பெண்களை அழைத்து வந்து பாலியல் தொல்லை கொடுத்து வீடியோ எடுத்து வைத்திருப்பதாகவும் அவர் புகாரில் தெரிவித்திருந்தார்.

ஆபாச வீடியோக்கள் போலி.?
 
பணிப்பெண் அளித்த புகாரின் பேரில் ஹோலேநரசிபுரா நகர போலீசார் பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு செய்தனர். பிரஜ்வல் ரேவண்ணா கைது செய்ய வாய்ப்பு உருவானதால், அவர் ஜெர்மனுக்கு தப்பி சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது ஆபாச வீடியோக்கள் அனைத்தும் போலியானவை- மார்பிங் செய்யப்பட்டவை என்று ரேவண்ணா தரப்பினர் தெரிவித்தனர்.
 
Karnataka CM
இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்த நிலையில், பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு குழுவை அமைத்து கர்நாடகா முதல்வர் சித்த ராமையா உத்தரவிட்டார்.
 
கர்நாடக முதல்வர் கடிதம்:
 
இந்நிலையில் பிரஜ்வல் ரேவண்ணாவை இந்தியா அழைத்து வர தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதி உள்ளார். 
 
ரேவண்ணாவை  இந்தியாவிற்கு அழைத்து வர சர்வதேச போலீசார் உதவியை நாட வேண்டும் என்றும்  அரசு உயர் பதவிகளில் உள்ளவர்களுக்கான டிப்ளமோட்டிக் பாஸ்போர்ட்டை முடக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தை சித்தராமையா குறிப்பிட்டுள்ளார்.
 
Ravana
வாய்மையே வெல்லும்:
 
இதனிடையே பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா  வாய்மையே வெல்லும் என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 
 
எனது வழக்கறிஞர் மூலம் பெங்களூர் போலீசாரிடம் தகவல் தெரிவித்து விட்டதாகவும் தற்போது நான் பெங்களூரில் இல்லை என்பதால் விசாரணைக்கு ஆஜராக முடியாது எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.