1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 3 ஜனவரி 2025 (08:10 IST)

2025ஆம் ஆண்டு புறப்பட்டு 2024ஆம் ஆண்டில் தரையிறங்கிய விமானம்.. த்ரில் அனுபவம்..!

Flight
2025 ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தில் கிளம்பிய விமானம் ஒன்று 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி போய் சேர்ந்த ஆச்சரியம் சமீபத்தில் நிகழ்ந்துள்ளது.

2025 ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி நள்ளிரவில் ஹாங்காங்கிலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு ஒரு விமானம் கிளம்பியது. இந்த விமானம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு 2024 ஆம் தேதி டிசம்பர் 31ஆம் தேதி இரவு 8:30 மணிக்கு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தரையிறங்கியது.

ஹாங்காங்கில் முன்னதாகவே புத்தாண்டு பிறந்த நிலையில், ஜனவரி ஒன்றாம் தேதி கிளம்பிய விமானம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 16 மணி நேரம் பின்தங்கி புத்தாண்டு பிறந்தது. 16 மணி நேரம் பின் தங்கியதால் அங்கு புத்தாண்டு பிறக்காமல் இருந்தது. இந்த அரிய நிகழ்வு அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளுக்கு நிகழ்ந்துள்ளது.

உலக அளவில் உள்ள டைம் ஜோன் தான் இதற்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விமானத்தில் பயணம் செய்தவர்கள் தாங்கள் டைம் டிராவல் முறையில் பயணம் செய்த அனுபவத்தை உணர்ந்ததாக கூறினர். இது போன்ற அதிசயம் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு தினத்தில் கிளம்பும் விமான பயணிகளுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.



Edited by Siva